ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (12) காலை வேலையில் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொட்டகலை அந்தோனிமலை கே.ஜி.கே. பிரிவை சேர்ந்த நபர் ஒருவரே சடலமாக மீட்கபட்டதாகவும், நேற்று (11) காலை 11 மணியளவில் சிங்கமலை வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற நபர் நாள் முழுவதும் வீட்டுக்கு வராமையினால் ஹட்டன் பொலிஸார், பொது மக்கள் ஆகியோர் இணைந்து தேடுல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போதே வனப்பகுதியில் இருந்து விறகு கட்டோடு குறித்த சடலம் மீட்கபட்டதாகவும், கொட்டகலை அந்தோனிமலை கே.ஜி.கே பிரிவை சேர்ந்த 65 வயதினை கொண்ட 03 பிள்ளைகளின் தந்தையான எம்.மகேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மீட்கபட்ட சடலம் பிரேத பரீசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad