இஸ்ரேலின் பல பகுதிகளில் மோதல்கள் வெடித்தன - பொலிஸார் மீது குப்பைகளை வீசி அவமதிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

இஸ்ரேலின் பல பகுதிகளில் மோதல்கள் வெடித்தன - பொலிஸார் மீது குப்பைகளை வீசி அவமதிப்பு

இஸ்ரேல் முழுவதும் பாடசாலைகள் மற்றும் மத செமினரிகளை திறப்பதன் மூலம் கொரோனா வைரஸ் முடக்கல் விதிகளை மீறிய தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதர்களுடன் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு தடுப்பூசி வெளியீடு இருந்தபோதிலும், அதிகரித்து வரும் கொரோனா நோயார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இஸ்ரேல் மூன்றாவது முடக்கலுக்கு மத்தியில் உள்ளது.

இந்நிலையில் முடக்கல் உத்தரவுகளை மீறி திறக்கப்பட்ட மத பாடசாலைகளை பொலிஸார் மீண்டும் மூடுவதற்கு முயன்றதால் ஜெருசலேம் மற்றும் அஷ்டோடில் மோதல்கள் வெடித்தன.

பல பெரிய அதி-ஆர்த்தடாக்ஸ் யூத பிரிவுகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, பாடசாலைகளை தொடர்ந்து திறந்து, ஜெப ஆலயங்களில் பிரார்த்தனை செய்து, வெகுஜன திருமணங்களையும் இறுதிச் சடங்குகளையும் நடத்தியுள்ளன.

குறிப்பாக ஜெருசலேமில் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு வெளியே நூற்றுக்கணக்கான அதி-ஆர்த்தடாக்ஸ் குடியிருப்பாளர்கள் கூட்டத்தை கலைக்க பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பிரயோகம் கொண்டு தாக்கியும் உள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்றபோது கோபடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரை, இங்கிருந்து வெளியேறுங்கள் நாஜிக்கள் என்று அழைத்து குப்பைகளை அவர்கள் மீது வீசியும் அவமதித்துள்ளனர்.

இந்த மோதலில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததுடன், குறைந்தது நான்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவத்தனர்.

இஸ்ரேலில் 593,961 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அதனால் 4,341 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad