நோயாளருக்கு கொரோனா - மூடப்பட்டது மன்னார் வைத்தியசாலையின் நோயாளர் விடுதி! - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

நோயாளருக்கு கொரோனா - மூடப்பட்டது மன்னார் வைத்தியசாலையின் நோயாளர் விடுதி!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் வைத்தியசாலையின் ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சநிலை அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளிகளைப் பார்வையிடல் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற காரணங்களுக்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad