ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார - செயற்குழுவில் மேலும் சில பதவிக்கு அனுமதி - எம்.பி. பதவி தொடர்பில் தீர்மானமில்லை - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார - செயற்குழுவில் மேலும் சில பதவிக்கு அனுமதி - எம்.பி. பதவி தொடர்பில் தீர்மானமில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சில பதவிகளுக்கு அக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் அக்கட்சியில் பொதுச் செயலாளராக இருந்த அகில விராஜ் காரியவசம் அண்மையில் இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (13) ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற விசேட செயற்குழுக் கூட்டத்திலேயே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் சட்ட செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்தார்.

அதற்கமைய அனுமதி வழங்கப்பட்ட பதவிகள்
அகில விராஜ் காரியவசம் - உப தலைவர்
பாலித ரங்கேபண்டார - பொதுச் செயலாளர்
வஜிர அபேவர்தன - தவிசாளர்
ஏ.எஸ்.எம். மிஸ்பா - பொருளாளர்

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசியப்ப்பட்டியல் பாராளுமன்ற பதவிக்கு இதுவரை எவரும் பரிந்துரைக்கப்படவில்லை என்பதோடு, இன்றைய கூட்டத்திலும் அது தொடர்பான எவ்வித தீர்மானமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad