ரயிலுடன் மோதி ஏறாவூறைச் சேர்ந்தவர் உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, January 7, 2021

ரயிலுடன் மோதி ஏறாவூறைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் ஏறாவூர் ரயில் நிலையத்து அருகாமையில் தண்டவாளத்தில் வேலைக்கு நடந்து சென்ற ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று (07) பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

ஏறாவூர் 3 பிரிவு, மகளீர் பாடசாலை வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஜமால்டீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ரயில் சம்பவதினமான இன்று பகல் 11.15 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற போது ரயில் தண்டவாளத்தில் வேலைக்கு நடந்து சென்ற ஒருவர் ரயிலுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்தவர் வாய்பேச முடியாதவர் எனவும், சடலம் பிரோத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad