தெதுரு ஓயா நீர்த் தேக்கத்திற்கு அருகில் மண் அகழ்வு - 6 டிப்பர் வாகனங்களுடன் 7 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

தெதுரு ஓயா நீர்த் தேக்கத்திற்கு அருகில் மண் அகழ்வு - 6 டிப்பர் வாகனங்களுடன் 7 பேர் கைது

தெதுரு ஓயா நீர்த் தேக்கத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதியில் சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட 07 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

மண் அகழ்விற்கு பயன்படுத்திய 6 டிப்பர் வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் சிலவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

வனப் பகுதியில் அகழப்படுகின்ற மண், பிரதேசத்திலுள்ள சட்ட விரோத மணல் ஏற்றும் இடமொன்றுக்கு கொண்டு செல்லப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போலியான மண் அகழ்வு அனுமதிப்பத்திரமொன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

தெதுரு ஓயா நீர்த் தேக்க வனப் பகுதியில் மண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் தமது காரியாலயத்தினூடாக விநியோகிக்கவில்லை என தெதுரு ஓயா நீர்த் தேக்கத்தின் பொறியியலாளர் சம்பத் சமரஜீவ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad