ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது, 5 பில்லியன் டொலரை நாடு இழந்தது - அமைச்சர் காஞ்சன விஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Monday, January 25, 2021

ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது, 5 பில்லியன் டொலரை நாடு இழந்தது - அமைச்சர் காஞ்சன விஜயசேகர

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.

முதலாவது அலையை முடக்க கட்டுப்பாடுகள் மூலம் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் முடிந்தது என குறிப்பிட்ட அவர், பொருளாதாரத்தையும் நாட்டையும் தொடர்ச்சியாக நிறுத்திவைக்க முடியாது என ஜனாதிபதி கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால், சுற்றுலாத் துறையினால் கிடைக்கும் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை நாடு இழந்தது என்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர சுட்டிக்காட்டினார்.

தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும் அன்றிலிருந்து அத்துறை மீளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு கடன் சுமையில் இருந்தபோது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்றும் இருப்பினும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வட்டி விகிதத்தைக் குறைக்கவும் தங்களால் முடிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாத்தறை நிருபர்

No comments:

Post a Comment