4 கஜ முத்துக்களுடன் பெண் உட்பட ஐவர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, January 14, 2021

4 கஜ முத்துக்களுடன் பெண் உட்பட ஐவர் கைது

(செ.தேன்மொழி)

அம்பாந்தோட்டை பகுதியில் விற்பனை செய்வதற்காக தயாராக்கப்பட்டிருந்த 4 கஜ முத்துக்களுடன் பெண்ணொருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய அம்பாந்தோட்டை பகுதியில் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 4 கஜ முத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்தாக பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் வெல்லவாய, கொஸ்லந்த, எதிலிவௌ மற்றும் மொணராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளின் பொது தெரியவந்துள்ளது.

கஜமுத்துக்கள் நான்கும் தரமானதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை தற்போது வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad