2021 ஆம் ஆண்டின் உலகின் அதிக செல்வாக்குடைய கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 100 ஆவது இடம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

2021 ஆம் ஆண்டின் உலகின் அதிக செல்வாக்குடைய கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 100 ஆவது இடம்

2021 ஆம் ஆண்டின் உலகின் அதிக செல்வாக்குடைய கடவுச் சீட்டுக்களின் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கையின் கடவுச் சீட்டானது 100 ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையின் கடவுச் சீட்டை பயன்படுத்தி 42 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்க முடியும்.

இந்தியாவின் கடவுச்சீட்டு 85 ஆவது இடத்திலும் பாகிஸ்தானின் கடவுச்சீட்டு 107 ஆவது இடத்திலும் உள்ளது.

இப்பட்டியலில் ஜப்பான் நாட்டின் கடவுச்சீட்டு முதலிடம் பிடித்துள்ளது. ஜப்பான் கடவுச் சீட்டை பயன்படுத்தி 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். 

இப்பட்டியலில் ஜப்பான் தொடர்ச்சியாக முதலாம் இடத்தை பிடித்துள்ளமை இது மூன்றாவது சந்தர்ப்பமாகும்.

இரண்டாவது இடத்தை சிங்கப்பூரும் (190), மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை (189) ஜேர்மன் மற்றும் தென் கொரிய நாடுகளும் பிடித்துள்ளன.

2021 இல் செல்வாக்குமிக்க கடவுச்சீட்டுகள்

1. ஜப்பான் (191)

2. சிங்கப்பூர் (190)

3. தென்கொரியா, ஜேர்மனி (189)

4. இத்தாலி, பின்லாந்து, ஸ்பெய்ன், லக்சம்பர்க் (188)

5. டென்மார்க், ஆஸ்திரியா (187)

6. சுவீடன், பிரான்ஸ், போர்த்துக்கல், நெதர்லாந்து, அயர்லாந்து (186)

7. சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே, பெல்ஜியம், நியூஸிலாந்து (185)

8. கிரேக்கம், மொல்டா, செக் குடியரசு, அவுஸ்திரேலியா (184)

9. கனடா (183)

10. ஹங்கேரி (181)

2021 இல் வலுவற்ற கடவுச்சீட்டுகள் 

101. ஈரான், பங்களாதேஷ் (41 destinations)

102. லெபனான், கொசோவோ, சூடான் (40)

103. வடகொரியா (39)

104. லிபியா, நேபாள் (38)

105. பாலஸ்தீன் (37)

106. சோமாலியா, யேமன் (33)

107. பாகிஸ்தான் (32)

108. சிரியா (29)

109. ஈராக் (28)

110. ஆப்கானிஸ்தான் (26)

No comments:

Post a Comment

Post Bottom Ad