வெள்ளை மாளிகையில் குடியேறிய ஜோ டைனின் இரு நாய்கள் - 120 ஆண்டுகளில் ஒரு நாயைக்கூட வைத்திருக்காத ட்ரம்ப் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

வெள்ளை மாளிகையில் குடியேறிய ஜோ டைனின் இரு நாய்கள் - 120 ஆண்டுகளில் ஒரு நாயைக்கூட வைத்திருக்காத ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் ஜேர்மன்செப்பட் வகை நாய்களான சேம்ப் மற்றும் மேஜர் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் குடியேறியுள்ளன.

சேம்ப் ஒரு செங்கல் அடுப்பு உள்ள இடத்தில் தனது புதிய படுக்கையை அனுபவித்து வருவதாகவும், மேஜர் புல்வெளியில் ஓடுவதை விரும்புவதாகவும் முதல் பெண்மணியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சேம்ப் (Champ)
சேம்ப் வெள்ளை மாளிகைக்கு புதியதல்ல. பைடன் குடும்பம் 2008 ஆம் ஆண்டில் அந்த நாயை வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்தார்கள், அவர் துணை ஜனாதிபதியாக இருந்த இரண்டு காலப்பகுதிகளிலும் அவர்களுடன் தங்கியிருந்தது.

மேஜர் (Major)
மேஜர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பைடன் குடும்பத்தில் சேர்ந்தது. 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பைடன் டெலாவேர் ஹ்யூமன் அசோசியேஷனில் வளர்ந்து வந்த மேஜரை தத்தெடுத்தார்.

மேஜர் மீட்பு பணிகளில் கைதேர்ந்தது. ஜனாதிபதி மாளிகையில், முதன் முதலாக வசிக்கும் மீட்பு நாய் என்ற சிறப்பையும், இது பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நவீன யுகத்தில் பிராணிகளை வைத்துக் கொள்ளாமல் வெள்ளை மாளிகையில் நான்கு ஆண்டுகள் கழித்த முதல் ஜனாதிபதி ஆவார்.

120 ஆண்டுகளில் ஒரு நாயைக்கூட வைத்திருக்காத வெள்ளை மாளிகையின் முதல் குடியிருப்பாளராகவும் ட்ரம்ப் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment