இந்தோனேசியாவில் பலத்த மழை : நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

இந்தோனேசியாவில் பலத்த மழை : நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

இந்தோனேசியா நாட்டில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவில் பலத்த மழையால் மேற்கு ஜாவா மாகாணம் சுமேடங் மாவட்டத்தில் உள்ள சிஹான்ஜிவாங் கிராமத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. 

அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது. அப்போது இன்று 2வது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்தனர். இதில் மீட்புகுழுவினர் சிலரும் அடங்குவர். அங்கு தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது. 

நிலச்சரிவால் சாலைகள், பாலங்களில் மண் சரிந்து கிடக்கிறது. போக்கு வரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு கருவிகளை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad