கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 10 கைதிகள் உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 10 கைதிகள் உயிரிழப்பு

(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளாதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை வீழ்சியடைந்து வருகின்ற நிலையிலும், புதிதாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. 

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் ஏழு பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 அதிகாரிகள் உட்பட 158 பேரே இது வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 129 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 4114 பேர் குண்மடைந்துள்ளனர்.

இதேவேளை, வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் 4 ஆயிரத்து 418 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய 134 சிறைச்சாலை அதிகாரிகள், 495 ஆண் சிறைக் கைதிகள், 11 பெண் சிறைக் கைதிகள், 3 ஆயிரத்து 544 ஆண் விளக்கமறியல் கைதிகள், 234 பெண் விளக்கமறியல் கைதிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad