கினிகத்தேனை - பிளக்வோட்டர் தோட்டப் பகுதி முடக்கம் : பாதுகாப்பு கடமையில் பொலிஸார், இராணுவத்தினர்! - News View

Breaking

Post Top Ad

Tuesday, December 8, 2020

கினிகத்தேனை - பிளக்வோட்டர் தோட்டப் பகுதி முடக்கம் : பாதுகாப்பு கடமையில் பொலிஸார், இராணுவத்தினர்!

நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் இருந்து எவரும் வெளியேறுவதற்கும் அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகளுக்கு வெளியார் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள், மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடரும் எனவும் கூறினர்.

எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மேலும் 600 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

ஹட்டன், அம்பகமுவ பொது சுகாதார காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று மாத்திரம் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad