அப்துல்லா மஹ்ரூப் சி.ஐ.டி. யினரால் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, December 14, 2020

அப்துல்லா மஹ்ரூப் சி.ஐ.டி. யினரால் கைது

திருகோணமலை மாவட்ட முன்னாள் பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல்லாஹ் மொஹமட் மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (14) இரவு கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து, குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

2015 - 2019 காலப்பகுதியில் சதொச நிறுவனத்திற்குரிய வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த பாறுக் மொஹமட் அஸ்லம் என்பவர் மாத்தளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண தெரவித்தார்.

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான பல வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக, முறைப்பாடு கிடைத்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்படும் வேளையில் தனது வாகனத்தில் கொழும்பிற்கு வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தெரியப்படுத்தியும் தங்களுடைய வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறப்பட்டதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad