தொழில்துறை பிணக்குகள் தொடர்பான விடயங்களை மூன்று மாதங்களுக்குள் தீர்க்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவுறுத்தல் - News View

Breaking

Post Top Ad

Friday, December 4, 2020

தொழில்துறை பிணக்குகள் தொடர்பான விடயங்களை மூன்று மாதங்களுக்குள் தீர்க்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவுறுத்தல்

(க.பிரசன்னா) 

தொழிலாளர்கள் அல்லது தொழிற்சங்கங்கள் தாக்கல் செய்த தொழில்துறை பிணக்குகள் தொடர்பான விடயங்களை மூன்று மாதங்களுக்குள் தீர்க்குமாறு தொழில்துறை பிணக்குகளைத் தீர்க்கும் குழு உறுப்பினர்களுக்கு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவுறுத்தியுள்ளார். 

பிணக்குகளை தீர்க்கும் குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்ட 220 விடயங்களில், மொத்தம் 183 விடயங்களை அதன் 19 உறுப்பினர்கள் அடங்கிய குழு விசாரித்து வருகிறது. 

அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான அநீதியும் ஏற்படாத வகையில் பிணக்குகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளர். 

இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, வார இறுதி நாட்களில் விசாரணைகளை நடத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad