வறுமையால் தனது 5 குழந்தைகளையும் கால்வாயில் வீசிய தந்தை - இரு குழந்தைகளின் உடல்கள் மீட்பு, எஞ்சியவர்களை தேடும் பணி - News View

Breaking

Post Top Ad

Sunday, December 6, 2020

வறுமையால் தனது 5 குழந்தைகளையும் கால்வாயில் வீசிய தந்தை - இரு குழந்தைகளின் உடல்கள் மீட்பு, எஞ்சியவர்களை தேடும் பணி

வறுமை காரணமாக தனது 5 குழந்தைகளையும் தந்தை கால்வாயில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டம் படோகி பகுதியைச் சேர்ந்தர் முகமது இப்ராகிம். இவருக்கு நடியா (7 வயது), ஜைன் (5 வயது), ஃபிசா (4 வயது), தஷா (3 வயது), அகமது (1 வயது) என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளது.

இதற்கிடையில், முகமது இப்ராகிம் கடந்த சில நாட்களாக வேலை கிடைக்காமல் இருந்ததால் போதிய வருமானம் இல்லாமல் அவரது குடும்பம் வறுமையால் திணறிவந்தது. இதனால், முகமதுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வறுமை காரணமாக முகமதுக்கும் அவரது மனைவிக்கும் இடையே இன்று (6) மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்திற்கு பின்னர் முகமதுவின் மனைவி சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மனைவியுடனான வாக்குவாதத்தால் கோபமடைந்த முகமது தனது 5 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கால்வாய்க்கு சென்றுள்ளார்.

வறுமை மற்றும் மனைவியின் மீது இருந்த கோபத்தில் தனது 5 குழந்தைகளையும் முகமது கால்வாய்க்குள் வீசியுள்ளார். வீட்டை விட்டு வெளியே சென்ற முகமதுவின் மனைவி சிறிது நேரத்தில் வீட்டில் வந்து பார்த்தபோது கணவர் மற்றும் குழந்தைகளை காணவில்லை என்பதால் சந்தேகமடைந்து அருகில் உள்ள கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு கணவர் மட்டும் நின்று கொண்டிருந்ததை கவனித்த அவர் குழந்தைகள் பற்றி கேட்டுள்ளார். அதற்கு குழந்தைகளை கால்வாய்க்குள் வீசி விட்டதாக கணவர் கூறியதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் கால்வாய்க்குள் வீசப்பட்ட 5 குழந்தைகளையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் ஃபிசா (4 வயது) மற்றும் அகமது (1 வயது) ஆகிய இரண்டு குழந்தைகளின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டது. எஞ்சிய குழந்தைகளின் நிலைமை என்ன ஆனது என தெரியவில்லை. 

இதையடுத்து, வறுமையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெற்ற குழந்தைகள் 5 யும் கால்வாயில் வீசிக் கொன்ற தந்தை முகமதுவை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad