ஜனாதிபதி கோத்தாபயவின் உரை மக்களை ஏமாற்றும் வகையிலேயே அமைந்தது - ரோஹண பண்டார - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

ஜனாதிபதி கோத்தாபயவின் உரை மக்களை ஏமாற்றும் வகையிலேயே அமைந்தது - ரோஹண பண்டார

(செ.தேன்மொழி) 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உரை மக்களை ஏமாற்றும் வகையிலேயே அமைந்தது. அதில் நாட்டுக்கு பயன்தரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவர் எதனையும் கூறவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உரை மக்களை ஏமாற்றும் வகையிலேயே அமைந்தது. அதில் நாட்டுக்கு பயன்தரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவர் எதனையும் கூறவில்லை. 

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டம் அதன் சகாகக்களுக்கு வரப்பிரசாதங்களை பெற்றுக் கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. வரி குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்திருந்த போதிலும், அதன் பயன் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. சிறுவர்த்தகர்களும் தற்போது பாதிப்படைந்துள்ளனர்.

ஆனால், அரசாங்கத்தின் ஆதரவாளர்களான, முன்னணியில் உள்ள வர்த்தகர்களுக்கு பயன்களை வழங்கும் வகையிலேயே அரசாங்கம் தீர்மானங்கள் எடுக்கிறது.

அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காகவே வரவு செலவு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் ஆளும் தரப்பு எம்.பி.களுக்கே வழங்கப்படுகின்றது.

அவர்களது வெற்றிக்காக வாக்களித்த மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், வீதிகளை நிர்மாணிப்பதாகக் கூறி தங்களது தேவைகளையும் நிறைவு செய்து கொள்கின்றனர்.

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்யப் போவதாக கூறினார்கள். ஆனால் இன்னமும் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக தேடும் பணத்தையும் அரசாங்கம் பறித்துக் கொள்ளும். நாட்டின் உண்மைத்தன்மையை எடுத்துக்காட்டி பொறுப்பு கூறக்கூடிய ஒரு அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம் என்றார்.

No comments:

Post a Comment