கொழும்பு வாழ் மக்களுக்கு தயவுசெய்து உதவி செய்து பகிர்வோம் - இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 29, 2020

கொழும்பு வாழ் மக்களுக்கு தயவுசெய்து உதவி செய்து பகிர்வோம் - இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம்

நாட்டில் எந்த இடத்தில் இயற்கை அனர்த்தமோ ஏதும் கஸ்டமோ வந்தால் அம்மக்களுக்கு இனபேதம் மற்றும் எவ்வித பேதமும் பாராமல் உடனடியாக உதவி புரிவதில் கொழும்பு வாழ் மக்கள் முதன்மையானவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை

ஆனால் இன்று இந்த கொடிய கோரோனாவினால் பல கொழும்பு வாழ் மக்கள் உணவுக்கும் மருந்துக்கும் வசதியின்றி பலர் கஸ்டபடுவதை பலரின் தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அறியகூடியதாக உள்ளது.

நண்பர்களே உங்களுக்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் கஷ்ட பிரதேசத்தில் இருக்கலாம் அவர்கள் கஷ்டத்தை வாய் திறந்து கேட்க அவமானத்தில் இருக்கலாம். அவர்களுக்கு உங்களால் முடிந்ததை தனியாகவோ அல்லது கூட்டாகவோ இனைந்து முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

நாம் கொடுக்கும் 500 ரூபாய் பசியில் இருக்கும் ஒரு குடும்பத்தின் ஒரு நாளைக்கான உணவாகக்கூட இருக்கலாம் அல்லது அவர்களது பிஞ்சு குழந்தையின் பால்மா தேவையை தீர்த்து வைக்கலாம். நோயாளின் உயிர்காக்கும் மருந்தாக இருக்கலாம். 

முடிந்தளவு உதவுவோம் முழு மனிதனாக வாழ்வோம். எல்லாம் வல்ல இறைவனை நம் அனைவரினதும் கஷ்டங்களை தீர்த்து நிம்மதியான வாழ்வை தந்தருள்வானாக.

இம்ரான் நெய்னார்
இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad