போகம்பறையிலிருந்து தப்ப முயன்று மரணமடைந்தவர் உள்ளிட்ட இரு கைதிகளுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

போகம்பறையிலிருந்து தப்ப முயன்று மரணமடைந்தவர் உள்ளிட்ட இரு கைதிகளுக்கு கொரோனா

போகம்பறை பழைய சிறைச்சாலையிலிருந்து நேற்றையதினம் (19) தப்பிக்க முயன்ற இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மரணமடைந்த கைதிக்கும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை, PCR பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சிறையிலிருந்து தப்பி வெளியில் ஓடி, மத்திய மாகாண கல்வித் திணைக்கள வளாகத்தில் பதுங்கியிருந்து நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கு, PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவரது அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்றும், கண்டிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, போகம்பறை பழைய சிறைச்சாலையில் 167 கைதிகள், கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், பல்லேகலை பொலிஸ் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட 10 பொலிஸ் அதிகாரிகளுக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (19) உறுதிசெய்யப்பட்டுள்ளது.

(எம்.ஏ. அமீனுல்லா)

No comments:

Post a Comment

Post Bottom Ad