உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்கு பெருமை தருகிறது கமலா ஹரிஸுக்கு சந்திரிகா வாழ்த்து - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்கு பெருமை தருகிறது கமலா ஹரிஸுக்கு சந்திரிகா வாழ்த்து

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் கமலா ஹரிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அவரின் வெற்றி தெற்காசியப் பெண்களுக்கும் உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்கும் பெருமை தருகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கும் கமலா ஹரிஸுக்கும் டுவிட்டர் சமூகவலைத்தளப் பதிவின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமெரிக்க மக்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார்.

'மன்னர்கள் பைத்தியக்காரர்களாக மாறும்போது ஜனநாயகமும் அதன் செயற்பாடுகளுமே மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பாதுகாப்பாகும். ஜனநாயக நிறுவனங்கள் அவற்றின் சுதந்திரத்திற்கும் சட்டப்படியான அவற்றின் செயற்பாட்டிற்கும் வருகின்ற சகல அச்சுறுத்தல்களையும் கடுமையாக எதிர்த்து நின்று வெற்றி கொள்ள வேண்டும். அதை அமெரிக்கா நிரூபித்திருக்கிறது. அமெரிக்க மக்களே, உங்களால் நாம் பெருமையடைகின்றோம்' என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad