தொடர்ந்து முந்தும் ஜோ பைடன்... நெருங்கி வரும் டிரம்ப் : அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 3, 2020

தொடர்ந்து முந்தும் ஜோ பைடன்... நெருங்கி வரும் டிரம்ப் : அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன், டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்து வருவதால் வெற்றி நிலவரத்தில் எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படலாம்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியை தெரிவு செய்ய அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் (பிரதிநிதிகள்) உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாக முடியும். 

தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 238 வாக்குகளும், குடியரசு கட்சி வேடபாளர் டிரம்ப் 213 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

ஜோ பைடன் முன்னிலை பெற்றிருந்தாலும் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவிலேயே உள்ளது. கடும் போட்டி உள்ள மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் இறுதி முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போது உறுதியாக கூற முடியாது. எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படலாம்.

நியூயோர்க், வெர்மாண்ட் மாசசூசட்ஸ், நியூஜெர்சி, மேரிலேண்ட், கனக்டிகட், டெலவர் மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். 

இதேபோன்று ஓக்லஹாமா, கெண்டகி, இண்டியானா, அர்கஜ்சாஸ், டென்னிசி, வெஸ்ட் விர்ஜினியா மாநிலங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். கடும் போட்டி இருந்த ஒகியோ, அயோவா மாநிலங்களிலும் டிரம்ப் வெற்றி பெற்றார். சொந்த மாநிலமான புளோரிடாவிலும் வெற்றி பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment