கண்காணிப்பு சாதனத்துடன் நடமாடும் உலகின் ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கி - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

கண்காணிப்பு சாதனத்துடன் நடமாடும் உலகின் ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கி

கென்யாவில் உள்ள உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டைக்காரர்களிடமிருந்து பாதுகாக்க அதற்குப் புவியிடங்காட்டி முறையான ஜி.பீ.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

வனவிலங்குப் பாதுகாப்பாளர்களுக்கு அது இருக்கும் இடம் தெரிய அந்தக் கருவி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒலிக்கும்.

மார்ச் மாதம், அந்த ஆண் ஒட்டகச்சிவிங்கியின் துணையும் கன்றும் வேட்டையாடிக் கொல்லப்பட்டதாக இஷாக்பினி ஹிரோலா சமூகப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது. 

லூசிசம் என்ற அரிய மரபணுக் கூற்றால் அந்த ஒட்டகச்சிவிங்கி வெள்ளையாக உள்ளது. அந்த வெள்ளையே அதன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கிறது.

தனித்துத் தெரிவதால் அது இலகுவாக வேட்டையாடப்படலாம் என அஞ்சப்படுகிறது. கென்யாவில் 2016 மார்ச்சில்தான் முதன்முதலில் வெள்ளை ஒட்டகச்சிவிங்கள் காணப்பட்டன.

ஆபிரிக்க நாடுகளில் காணப்படும் ஒட்டகச்சிவிங்கிகள் மாமிசம் மற்றும் உடல் பாகங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad