சேவைகளை பெற்றுக் கொள்ள செல்லும் போது பேனை எடுத்துச் செல்லவும் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

சேவைகளை பெற்றுக் கொள்ள செல்லும் போது பேனை எடுத்துச் செல்லவும் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

ஏதேனும் வர்த்தக நிலையங்களில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக செல்லும் போது அங்கு வைக்கப்பட்டுள்ள தகவல்களை பதிவு செய்யும் புத்தகத்தில் தகவல்களை குறிப்பிடுவதற்காக பேனை ஒன்றை வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், புதியவர் என்றால் அந்த வர்த்தக நிலையத்தில் அவர் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார்.

விசேடமாக அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களில் கடமைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் செல்லும் போது சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக முகக்கவசம் முதலானவற்றை அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும்.

இதேபோன்று அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருபவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் ஓரளவுக்கு முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு செல்லும் போது அங்கு ஆவணங்களை பூர்த்திச் செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் உங்களது சொந்த பேனையை பயன்படுத்துவது சிறப்பானதாகும். இதன் காரணமாக இவ்வாறான அலுவல்களுக்காக செல்லும் அனைவரும் அனைத்து சந்தர்ப்பத்திலும் பேனை ஒன்றை வைத்திருப்பது முக்கியமானதாகும். இது மிகவும் சுகாதார பாதுகாப்பு மிக்கதாக இருக்கும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment