முன்பள்ளி கல்வி குறித்து தேசிய கொள்கையை ஆராய ஒன்பது பேர் கொண்ட குழு நியமனம் - News View

Breaking

Post Top Ad

Saturday, November 21, 2020

முன்பள்ளி கல்வி குறித்து தேசிய கொள்கையை ஆராய ஒன்பது பேர் கொண்ட குழு நியமனம்

முன்பள்ளி கல்வி குறித்து தேசிய கொள்கை தொடர்பாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், நாட்டின் கல்வி முறைமையில் முன்பள்ளி கல்வியின் முன்னுரிமை மற்றும் நிபுணத்துவத்தை மையமாகக் கொண்டு ‘முன்பள்ளி கல்வி குறித்த தேசிய கொள்கை’ வகுக்க கல்வி அமைச்சர் தலைமையில் 19 ஆம் திகதி பல்கலைக்கழக மானிய ஆணையத்தில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, ஆரம்பக் கல்வித் துறையில் நிபுணர்களின் ஆலோசனைகளின்படி தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வரைவு குறித்து ஆராய்ந்து பார்த்து இறுதித்தீர்மானம் எடுக்க மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த குழுவின் பரிந்துரைகளுடன் இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்க கல்வி அமைச்சரின் தலைமையில் 2020/12/11 அன்று இந்தக் குழு கூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad