தீபாவளிக்கு சட்டவிரோத மதுபானம் தயாரித்த மூவர் கைது! - News View

Breaking

Post Top Ad

Thursday, November 12, 2020

தீபாவளிக்கு சட்டவிரோத மதுபானம் தயாரித்த மூவர் கைது!

தீபாவளி பண்டிகைக் காலத்தில் விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் மூவரைக் கைது செய்துள்ளதாக, ஹட்டன் கலால் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஜனக பெரேரா தெரிவித்தார்.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலை குனு கொட்டுவ வனப்பகுதியில் மாவெளி ஆற்றோடு இணையும் ஆற்றுப்பகுதியிலே சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்படுவதாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக, அவர் தெரிவித்தார்.

இன்று (வியாழக்கிழமை) குறித்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது ஒரு போத்தல் 1200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட இருந்தாகவும் கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன..

சுற்றிவளைப்பின்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், 750 லீற்றர் மதுபானம், 5,100 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சந்தேகநபர்கள் கெட்டபுல பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

(நோட்டன் பிரிஜ் நிருபர் - எம். கிருஸ்ணா)

No comments:

Post a Comment

Post Bottom Ad