வேலையற்ற இளைஞர் யுவதிகள் தம்மைப் பதிவு செய்யுமாறு கோரிக்கை - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

வேலையற்ற இளைஞர் யுவதிகள் தம்மைப் பதிவு செய்யுமாறு கோரிக்கை

தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகள் தம்மைப் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகள் மாவட்ட செயலகங்களின் கீழ் உள்ள மாவட்ட தொழில் கேந்திர மையங்களில் தம்மைப் பதிவு செய்து கொள்ளுமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சின் கீழ் இயங்கும் மனித வள மற்றும் தொழில் பாதுகாப்புத் திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. 

இதற்காக www.dome.gov.lk என்ற இணையதள முகவரியின் கீழ் தம்மைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad