மேலும் இரு தாதியர்களுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 4, 2020

மேலும் இரு தாதியர்களுக்கு கொரோனா

கொழும்பு - தெற்கு போதனா வைத்தியசாலையில் (களுபோவில) மேலும் இரு தாதியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் ஏழாவது விடுதியில் பணிபுரியும் இரு தாதியர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே களுபோவில போதனா வைத்தியாசாலையில் பணியாற்றிய வைத்தியர் இருவருக்கும் தாதியொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மேலும் இரு தாதியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளியான பி.சி.ஆர். முடிவுகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad