தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்திற்கு வருவோர் முன்கூட்டி நேரத்தை பெறுமாறு வேண்டுகோள் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 22, 2020

தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்திற்கு வருவோர் முன்கூட்டி நேரத்தை பெறுமாறு வேண்டுகோள்

கொவிட் - 19 தொற்று நிலைமையின் காரணமாக தேசிய சுவடிகள் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு வருவதற்கு முன்னர் கொழும்பு தலைமை அலுவலகத்தின் தொலைபேசி இலக்கம் 0112696917 அல்லது 011 2694523 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டும், கண்டி கிளை அலுவலகத்தின் 081 2223729 தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டும் தமது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் இதற்கான நேரத்தை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் என்று தேசிய சுவடிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் info@archives.gov.lk அல்லது research@archives.gov.lk அல்லது kandy@archives.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவதற்கான தமது கோரிக்கைகளை முன்வைக்க முடியும்.

நூல்கள் மற்றும் பத்திரிக்கைகளை பதிவு செய்யும் பிரிவுக்கு வெளியீடுகளை ஒப்படைப்பதற்காக வருகை தருவதற்கான நேரத்தை முன்கூட்டியே உறுதி செய்துகொள்வதற்காக அனைத்து அச்சகர்களுக்கும், பத்திரிக்கை வெளியீட்டாளர்களுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கோரிக்கை மற்றும் புதிய வெளியீடுகளை பதிவு செய்வதற்கான அனைத்து விபரங்களையும் rbn@archives.gov.lk என்ற மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க முடியும்.

கொழும்பு தலைமை அலுவலகத்தில் 0112696917 அல்லது 01 12694523 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை சுகாதார ஆலோசனையின் அடிப்படையில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்துவதற்காகவே ஆகும் என்று தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது

No comments:

Post a Comment

Post Bottom Ad