கொரோனாவால் உயிரிழக்கும் இஸ்லாமியர்கள் அனைவரையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்கிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

கொரோனாவால் உயிரிழக்கும் இஸ்லாமியர்கள் அனைவரையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்கிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் தாக்கத்தில் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், ஆனால் அனைவரையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இறந்தவர்களை அவரவர் பிரதேசங்களில் அடக்கம் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் தொற்று நோயில் உயிரிழந்த இஸ்லாமியர்களை அவர்களின் சடங்குகளுக்கு ஏற்ப அடக்கம் செய்ய பிரதமர் யோசனை ஒன்றை அமைச்சரவையில் முன்வைத்ததாக பத்திரிகைகளில் அறிந்துகொள்ள முடிந்தது. அதனை நாம் வரவேற்கிறோம். 

அவரவர் மத சடங்களுக்கு அமைய உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் அதுவும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய முன்னெடுக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் வேறு தகவல்களும் வெளிவருகின்றன. இறந்தவர்களை அடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தை தெரிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த யோசனைகளை முன்வைத்ததாக அறிந்து கொள்ள முடிகின்றது. கடல் இருக்கின்ற காரணத்தினால் மன்னார் உகந்த பிரதேசம் என கூறியுள்ளதாக அறிய முடிகின்றது. இது உண்மையான காரணியாக இருந்தால் இலங்கையை சுற்றி கடல்தான் உள்ளது.

ஆகவே அந்தந்த மாவட்டங்களில் ஒரு பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டுமே தவிர அனைவரையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்யக் கூடாது, அது மக்களிடையே தவறான சிந்தனையை உருவாக்கும் என்றார்.

No comments:

Post a Comment