கோப் குழுவின் செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

கோப் குழுவின் செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

கொவிட் 19 கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் குழுவின் நடவடிக்கைகளை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொவிட் 19 சுகாதாரப் பாதுகாப்பு வழி காட்டல்களைப் பின்பற்றி கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை, நெடுஞ்சாலைகள் அமைச்சின் கணக்காளர், நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் அதனுடைய தொடர்புடைய திட்ட முகாமைத்துவப் பிரிவுகளின் அதிகாரிகள் இன்றையதினம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் கணக்காளர், சம்பந்தப்பட்ட திட்டப்பிரிவின் திட்டப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 07 அதிகாரிகள் மாத்திரம் இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான சாத்தியக் கூற்று ஆய்வு மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை இங்கு ஆராயப்படவிருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad