மேல் மாகாணத்திலிருந்து வெளி செல்வதற்கான அனைத்து இடங்களிலும் கடுமையான பாதுகாப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

மேல் மாகாணத்திலிருந்து வெளி செல்வதற்கான அனைத்து இடங்களிலும் கடுமையான பாதுகாப்பு

மேல் மாகாணத்திருந்து வெளியே பயணம் செய்ய எந்தவொரு நபருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித் துள்ளார்.

நேற்று இரவு முதல் நவம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை எவரும் மேல் மாகாணத்திருந்து வெளியே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படமாட்டது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 கொரோனா தொற்றை பரவுவதைத் தடுக்கும் தேசிய மையத்தின் உத்தரவுக்கமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் ஏராளமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி நேற்று இடம் பெற்ற கலந்துரையாடலில் கோரிக்கை விடுத்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைத்து இடங்களிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ளவர்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் 011 3422558 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் வண்டியை வரவழைக்க முடியும் என அவர் தெரி வித்தார்.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல் மற்றும் மருந்து விநியோகித்தல் ஆகியவற்றிற்கு எந்த விதமான தடையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment