தப்பியோடிய பெண்ணை கண்டுபிடிக்க புலனாய்வுப் பிரிவு களத்தில் : தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கங்கள்! - News View

Breaking

Post Top Ad

Saturday, November 21, 2020

தப்பியோடிய பெண்ணை கண்டுபிடிக்க புலனாய்வுப் பிரிவு களத்தில் : தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது தனது இரண்டரை வயது மகனுடன் தப்பி ஓடிய பெண்ணைக் கண்டுபிடிக்க புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் தலைமையகம் 011 2421111, பொலிஸ் அவசரகால பதிலளிப்பு பிரிவு 011 2433333 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத்தரும்படி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எஹலியகொட பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணும் அவரது இரண்டரை வயது மகனும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 09 மணியளவில் தப்பிச் சென்றதையடுத்து அவர்களை தேடும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பெண், தனது மகனுடன் பஸ்சில் தனது ஊருக்குச் சென்றுள்ளதுடன், அங்குள்ள உறவினர் ஒருவருன் வீட்டில் அவரது மகனை ஒப்படைத்து விட்டு அவர் அங்கிருந்து சென்றிருந்தார்.

பொலிஸாரின் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளுக்கமைய நேற்று காலை குறித்த பெண்ணின் மகனை எஹலியகொட, யாபா வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து அடையாளம் கண்ட பொலிஸார், அவரை மீண்டும் சிகிச்சைக்காக அங்கொட தொற்றுநோய் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் இருந்த வீட்டாரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

எனினும் சிறுவனின் தாய் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனையடுத்து இவரை தேடும் பணியில் விசேட பொலிஸ் குழுக்கள் நேற்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது, புலனாய்வுப் பிரிவினரின் தேடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad