பாடசாலைகளை திறக்கும் தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

பாடசாலைகளை திறக்கும் தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

சுகாதாரப் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் பாடசாலைகளைத் திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டமைக்கு ஆசிரியர் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் நவம்பர் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வழமை போன்று மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீமானம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யாமல் பாடசாலைகள் மீண்டும் திறக்கும் தீர்மானம் தவறானது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளைத் திறக்கப்படுவதை அரசாங்கம் அறிவித்த போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மாணவர்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக முறையான செயல்முறை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த பாடசாலைகள் தரம் 6 முதல் 13ஆம் வகுப்பு மாணவர்களின் 3 ஆம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad