கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் விடுவிப்பு - பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் - News View

Breaking

Post Top Ad

Saturday, November 21, 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் விடுவிப்பு - பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

கொவிட்-19 பரவல் நிலையை கருத்திற் கொண்டு, மேல் மாகாணத்திலுள்ள, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் அவசியத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த ஒரு சில பகுதிகள் நாளை (23) அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டம்
விடுவிக்கப்படும் பொலிஸ் பிரிவுகள்
பொரளை
வெல்லம்பிட்டி
கொழும்பு கோட்டை
கொம்பனித்தெரு

ஆயினும் பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்த கிராம சேவகர் பிரிவு ஆகியன மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும்.

13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்...
மட்டக்குளி
மோதறை
ப்ளூமெண்டல்
கொட்டாஞ்சேனை
கிராண்ட்பாஸ்
கரையோரம்
ஆட்டுப்பட்டித்தெரு
மாளிகாவத்தை
தெமட்டகொடை
வாழைத்தோட்டம்
மருதானை
புறக்கோட்டை
டாம் வீதி

கம்பஹா மாவட்டம்
நாளை (23) அதிகாலை 5.00 மணிக்கு விடுவிக்கப்படும் பொலிஸ் பிரிவுகள்

ஜா-எல
கடவத்தை

5 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

நீர்கொழும்பு
ராகமை
வத்தளை
பேலியகொடை
களனி

களுத்துறை மாவட்டம்
உடன் அமுலாகும் வகையில் பண்டாரகம பொலிஸ் பிரிவிலுள்ள பின்வரும் கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

போகஹவத்த கிராம சேவகர் பிரிவு
பமுணுமுல்ல (முஸ்லிம்) கிராம சேவகர் பிரிவு
கிரிமன்துடாவ கிராம சேவகர் பிரிவு
கோராவல கிராம சேவகர் பிரிவு
அட்டுளுகம மேற்கு கிராம சேவகர் பிரிவு
கலகஹமணடிய கிராம சேவகர் பிரிவு
பமுணுமுல்ல கிராம சேவகர் பிரிவு

No comments:

Post a Comment

Post Bottom Ad