மன்னாரில் 7 இலட்சம் ரூபா பொறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 11, 2020

மன்னாரில் 7 இலட்சம் ரூபா பொறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, துருக்கி சிட்டி பகுதியில் வைத்து சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட குற்றத் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துருக்கி சிட்டி பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்ற பொலிஸார் தன் வசம் வைத்திருந்த 7 கிலோ 815 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் 29 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி, மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமாரபள்ளேவலவின் வழிகாட்டலில், உப பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சா பொதிகைளை கைப்பற்றியுள்ளதோடு, குறித்த கஞ்சா பொதியை தமது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் துருக்கி சிட்டி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணையின் பின் குறித்த நபர் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad