துபாயிலிருந்து 52 பேர், கட்டாரிலிருந்து 41 பேர் இலங்கை திரும்பினர் - நேற்றையதினம் 10,514 PCR பரிசோதனைகள் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 22, 2020

துபாயிலிருந்து 52 பேர், கட்டாரிலிருந்து 41 பேர் இலங்கை திரும்பினர் - நேற்றையதினம் 10,514 PCR பரிசோதனைகள்

துபாயிலிருந்து 52 பேர், கட்டாரிலிருந்து 41 பேர் உள்ளிட்ட 93 பேர் இலங்கை திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இன்று (22) காலை கட்டாரின் டோஹா நகரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம், 41 பேர் வருகை தந்துள்ளனர். அத்துடன், ஐக்கிய அரவு இராச்சியத்தின் துபாய் நகரிலிருந்து UL 226 எனும் விமானம் மூலம் 52 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும், முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வரை முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம் (21) நாட்டில் 10,514 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad