32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ள வோல்ட் டிஸ்னி நிறுவனம் - News View

Breaking

Post Top Ad

Saturday, November 28, 2020

32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ள வோல்ட் டிஸ்னி நிறுவனம்

வோல்ட் டிஸ்னி நிறுவனம் 32,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் அந்நிறுவனத்தின் கேளிக்கைப் பூங்காக்களில் பணிபுரிபவர்கள்.

கொரோனா நோய்ப்பரவலால் கேளிக்கைப் பூங்காக்களில் வருகையாளர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அதனைச் சமாளிக்க ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக வோல்ட் டிஸ்னி கூறியது. 

28,000 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவர் என அந்நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு முன் தெரிவித்தது. ஆனால் அந்த எண்ணிக்கை இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டின் முற்பாதியில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வோல்ட் டிஸ்னி தெரிவித்தது.

கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இந்த டிஸ்னி லாண்டும் மூடப்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இதன் கிளைகள் மூடப்பட்டன.

No comments:

Post a Comment

Post Bottom Ad