24 மணி நேரத்தின் பின் மறையும் ட்விட்டர் பதிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

24 மணி நேரத்தின் பின் மறையும் ட்விட்டர் பதிவு

24 மணி நேரத்திற்கு பின்னர் மறையக்கூடிய பதிவுகளை ட்விட்டர் அறிமுகம் செய்துள்ளது.

‘பிலீட்ஸ்’ என்று அழைக்கப்படும் அந்த அம்சம் உலகளவில் பயன்படுத்தப்படலாம். ஸ்னப்சாட், இன்டாகிராமின் ‘ஸ்டோரி’ அம்சம் ஆகியவற்றைப் போன்று அது செயல்படும்.

ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்படும் வழக்கமான பதிவுகள் நிரந்தரமாகக் கணக்கில் இடம்பெறும். அவை எத்தனை விருப்பக் குறிகளைப் பெறும் அல்லது எத்தனை முறை பகிரப்படும் என்று பயனீட்டாளர்கள் கவலைப்படலாம்.

அவ்வாறு நிரந்தரப் பதிவுகளைச் செய்யத் தயங்குவோருக்கு ‘பிலீட்ஸ்’ உதவும் என்று நிறுவனம் கூறியது.

அதன் மூலம் பயனீட்டாளர்கள் கவலையில்லாமல் தங்களுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்று கூறப்பட்டது.

பயனீட்டாளர்களின் பக்கத்தின் மேல் தென்படவுள்ள அந்த புதிய அம்சத்தில், படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்யலாம்.

ட்விட்டர் பதிவுகளுக்கான அதே விதிமுறைகள் ‘பிலீட்ஸ்’ பதிவுகளுக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment