கிழக்கு மாகாணத்தில் இதுவரை 127 பேருக்கு கொரோனா, ஐந்து வைத்தியசாலைகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் - மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் லதாகரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 127 பேருக்கு கொரோனா, ஐந்து வைத்தியசாலைகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் - மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் லதாகரன்

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களாக 127 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

நேற்று (புதன்கிழமை) மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்டவர். இவர் கொழும்பு - அக்கரைப்பற்று தனியார் பஸ் சாரதியாக கடமையாற்றுபவர். குறித்த சாரதியுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேலியகொட மீன் சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவருக்கு தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்.

அதேபோன்று ஆரையம்பதி சுகாதார பிரிவின் ஒல்லிக்குளம் பகுதியில் 37 வயதுடைய பெண்னொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரும் கொழும்புக்கு சென்றுவந்தவர். இவருடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணாத்தில் ஐந்து வைத்தியசாலைகளில் கொரனா நோயாளர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment