காயங்களுடன் மீன் பிடி பூனையின் சடலம் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, October 17, 2020

காயங்களுடன் மீன் பிடி பூனையின் சடலம் மீட்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெலிவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள தேயிலை மலையில் இன்று (17) மதியம் சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் மீன் பிடி பூனையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த மீன் பிடி பூனையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மீன் பிடி பூனையை விஷ உணவு உட் கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் உடலில் இரண்டு காயங்கள் காணப்பட்டது. இது மனிதர்களுக்கு தீங்கு செய்யும் விலங்கு அல்ல என வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை பாதுகாப்பது மட்டுமல்ல எம்மையும் பாதுகாக்க தெளிவூட்டல்கள் அவசியம் என மக்கள் தெரிவித்தனர்.

குறித்த மீன் பிடி பூனையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad