சுய தனிமைக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு ஆயுள்வேத உடல் தேற்றிக் குடிநீர் மற்றும் சுவதாரனி பானய வழங்கல் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

சுய தனிமைக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு ஆயுள்வேத உடல் தேற்றிக் குடிநீர் மற்றும் சுவதாரனி பானய வழங்கல்

ஓட்டமாவடி நிருபர் அ.ச.முகம்மது சதீக்

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரிவில் சுய தனிமைக்குள்ளாக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமூக நல ஆயுள்வேத வைத்தியர் டாக்டர் எம்.எம்.எம். நிம்சாத் அவர்களினால் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய ஆயுள்வேத உடல் தேற்றிக் குடிநீர் மற்றும் சுவதாரனி பானய என்பன வழங்கப்பட்டன. 

பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனை அடுத்து அப்பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் அவர்களின் பணிப்புரைக்கமையவும் மட்டக்களப்பு மாவட்ட சுதேச மருத்துவ உற்பத்தி பிரிவின் வைத்திய பொருப்பதிகாரி டாக்டர் திருமதி வீ.அனெஸ்டின் அவர்களின் வழிகாட்டலுக்கமையவும் இவ்உடல் எதிரப்பு சக்தி குடிநீர் பானம் வழங்கப்பட்டதாக டாக்டர் நிம்சாத் தெரிவித்தார் .

சுதேச ஆயுள்வேத உடல் எதிர்ப்பு சக்தி பானத்தை வழங்குவதற்காக அப்பிரதேச கிராம சேவையாளர் ஐ.ஏ. றயீஸா ஹஸ்மத் மற்றும் அப்பிரதேச கொரோனா குழுவின் அங்கத்தவர்களான கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதி எம்.எப்.எம். ஜஃபர், பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையிலிருந்து எம்.எச்.எம். றஸீத், மற்றும் பீ.எம். பைஸல், எல்.ரீ.எம் சாதிக்கீன் ஆகியோர்களின் உதவியுடன் இவ்உடல் தேற்றிக் குடிநீர் பானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad