கொரோனா வைரஸூக்கு இலங்கையில் இரண்டு மருந்து வகைகள் தயாரிப்பு! - News View

Breaking

Post Top Ad

Friday, October 9, 2020

கொரோனா வைரஸூக்கு இலங்கையில் இரண்டு மருந்து வகைகள் தயாரிப்பு!

சுதேச வைத்திய அமைச்சின் மூலம் வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நபர்களை இலக்காகக் கொண்டு தேசிய ஒளடதங்கள் பல இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் மேம்பாடு மற்றும் சமூக ஆரோக்கியம் இராஜாங்க அமைச்சர் சிசிற ஜயக்கொடி தெரிவித்தார். 

ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து நோய்த் தடுப்பு பானம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து வில்லைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த மருந்துகள் அனைத்தும் நூறு சதவீதம் உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன என்றும் அவை ‘சதங்கா’ பானம் மற்றும் ‘சுவதரணி’ நோயெதிர்ப்பு பானம் என பெயரிடப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

இந்த மருந்துகள் ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் நேற்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இம் மருந்து அறிமுகப்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஜயக்கொடி தெரிவித்தார்.

மேலும் மேற்கத்திய மருத்துவத்தினால் இதுவரையிலும் கொவிட் -19 வைரஸ் தொற்றை குணப்படுத்த முடியவில்லை, எனவே மேற்கத்திய மருத்துவம் இன்று கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது என்றும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இந்த சவாலை எதிர்கொள்ளக்கூடிய மருந்துகளை உள்நாட்டு மருத்துவ அமைச்சினால் தயாரிக்க முடிந்ததுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad