கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சென்றவருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Friday, October 9, 2020

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சென்றவருக்கு கொரோனா

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

22 ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப கண்காட்சி அரங்கில் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெற்றது. 

குறித்த கொரோனா வைரஸ் தொற்றாளர் செப்டெம்பர் 23 ஆம் திகதி புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட சென்றதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

புத்தக கண்காட்சியை பார்வையிட்ட அவர் அன்றே கொழும்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கும், செப்டெம்பர் 30 ஆம் திகதி நுவரெலியாவுக்கும் சென்றுள்ளது தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நடவடிக்கை மையம் தெரிவித்தது. 

குறித்த கொரோனா நோயாளி சிலாபத்தில் வசிக்கும் 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சமீபத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad