ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு கோரி கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை சார்பில் மனு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Friday, October 16, 2020

ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு கோரி கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை சார்பில் மனு தாக்கல்

தான் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது நிராகரிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை சார்பில் செத் சரண நிறுவனத்தின் பணிப்பாளர் லோரன்ஸ் ரமநாயக்க அருட்தந்தை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ள லோரன்ஸ் ரமநாயக்க அருட்தந்தை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரியாஜ் பதியூதீன் என்ற சந்தேக நபருக்கு எதிராக போதுமான சாட்சிகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தாக கூறினார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரியாஜ் பதியுதீனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விடுதலை செய்தமை சட்டவிரோத செயல் என உத்தரவிடுமாறும் இந்த இடையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.

ரியாஜ் பதியுதீன் குறித்து பூரண விசாரணையை ஆரம்பிப்பதற்கு பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் நிஷாந்த லோரன்ஸ் ராமநாயக்க ஆயரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment