செட்டிபாளையத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

செட்டிபாளையத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான போரூந்து வண்டியை அதே வழிப்பாதையூடாக பயணித்துக் கொண்டிருந்த கார் முந்திச் செல்ல முயற்சித்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்ததுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தின் போது காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்ததுடன் பஸ் வண்டியின் பின் பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்து சம்மந்தப்பட்ட மேலதிக விசாணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad