மார்ச் மாதத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துவிடும் - இங்கிலாந்து அறிவியல் ஆலோசகர் - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

மார்ச் மாதத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துவிடும் - இங்கிலாந்து அறிவியல் ஆலோசகர்

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1 க்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் கிடைத்து விடும் என இங்கிலாந்து அரசின் அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மருந்து உற்பத்தி நிறுவனம் அஸ்ட்ரா செனேக்கா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி நல்லபலன் அளித்து வருகிறது. அந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1 க்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் கிடைத்து விடும் என அந்நாட்டு அரசின் அறிவியல் ஆலோசகர் ஜேர்மி பரேர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்கை நீயூஸ் செய்தி நிறுவனத்தில் ஜேர்மி கூறியதாவது மற்ற ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு கிருஸ்துமஸ் சாதாரணமாக இருக்காது. இந்த ஆண்டு மிகவும் கடுமையானதாகவே இருக்கும். 

தடுப்பூசியை பொறுத்த வரை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளை நாம் உருவாக்கிவிடுவோம். 1 க்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை நாம் உருவாக்கி விடுவோம் என நினைக்கிறேன்.

கொரோனா தடுப்பூசி தொடர்பான முழுமையான தகவல்களை இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குள் நாம் பெற்று விடுவோம். கொரோனா சிகிச்சை முறைகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad