பஸ்ஸில் பரவிய கொரோனா - கொழும்பு கப்பல்துறை ஊழியர்கள் ஐவருக்கு தொற்று உறுதி! - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

பஸ்ஸில் பரவிய கொரோனா - கொழும்பு கப்பல்துறை ஊழியர்கள் ஐவருக்கு தொற்று உறுதி!

கொழும்பு கடற்படை கப்பல்துறையில் பணியாற்றும் ஐந்து ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

கொழும்பு - மத்துகம பஸ்ஸில் பயணித்த கொழும்பு கடற்படை கப்பல்துறை ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளர்களராக இனங்காணப்பட்டுள்ளனர்.

தற்போது குறித்த நபர் உட்பட மேலும் நான்கு ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

குறித்த பஸ்ஸில் பயணித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் தாதி ஒருவர், பஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது, கொழும்பு கடற்படை கப்பல் துறையில் பணிபுரியும் ஐந்து கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்ட நபர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

அத்துடன் இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையம் இல்லை என, இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad