உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவனுக்கு கொரோனா! - News View

Breaking

Post Top Ad

Friday, October 9, 2020

உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவனுக்கு கொரோனா!

சிலாபத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திங்கட்கிழமை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள சிலாபம் ஆராய்ச்சிகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனுக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொரோனா தொற்று பரவலுக்கான மூலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன் கடந்த வார இறுதியில் கம்பஹாவில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான மீட்டல் வகுப்பிற்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. 

தற்போது மாணவன் சிலாபம் பொது வைதத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள், அயலவர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பு பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad