துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபரை சுட்டு வீழ்த்திய படையினர் - பிரான்சில் தொடரும் பதற்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபரை சுட்டு வீழ்த்திய படையினர் - பிரான்சில் தொடரும் பதற்றம்

பிரான்ஸ் நாட்டில் இன்று பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு நபர் துப்பாக்கியுடன் தெருக்களில் சுற்றித்திருந்துள்ளார். அந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மதியம் அந்நாட்டின் நைஸ் நகரில் உள்ள நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயத்திற்குள் கத்தியுடன் நுழைந்த பயங்கரவாதி அங்கிருந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தினான்.

பயங்கரவாதியின் இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஒரு பெண் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலையடுத்து பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பிரான்சின் அவிங்கான் மாகாணத்தில் உள்ள மோண்ட்பவேட் என்ற நகரில் உள்ள ஒரு தெருவில் இன்று மாலை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிதான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு பாதுகாப்பு படையினரை நோக்கி மிரட்டினான். அந்த பயங்கரவாதியிடம் ஆயுதத்தை கைவிட்டு சரணடையும்படி பாதுகாப்பு படையினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அந்த பயங்கரவாதி முன்னேறிவந்து பாதுகாப்பு படையினரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டான். 

இதையடுத்து, முன்னெச்சரிக்கை மற்றும் தற்காப்பு நடவடிக்கையாக அந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஒரே நாளில் இரண்டு பயங்கராத தாக்குதல் காரணமாக பிரான்சில் உச்சபட்ச பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment