இறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகளுடன் மூவர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

இறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகளுடன் மூவர் கைது

மாரவில - தொடுவாவ கரையோரப் பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்று சனிக்கிழமை மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தொடுவாவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை காலை மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போதே கடலாமைகளைப் பிடித்துள்ளனர். 

அவற்றினை விற்பனை செய்யும் நோக்குடன் இரகசியமாக கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் இவ்வாறு நீண்ட நாட்களாக கடலாமைகளைப் பிடித்து அவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கடலாமை ஓடுகள், 20 கிலோ நிறையுடைய கடலாமை இறைச்சி, தராசு மற்றும் கத்திகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad